சிங்கப்பூரில் எத்தனை சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்?- முழுமையான தகவல்!

Pic: REUTERS

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்; அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூர் விரைவில் மீண்டும் திறக்கப்படுவதை விரும்புவோர் பொறுமை காக்க வேண்டும் – அமைச்சர்

அறிவுறுத்தல் காரணமாக, வெளியே செல்லும் முதியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், முதியவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல், சிங்கப்பூரர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கிவிட்டுள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப் போதிலும், பெரும்பாலானோருக்கு லேசான அல்லது அறிகுறிகள் இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசியின் முழுமையாக அல்லது ஒரு டோஸை எடுத்துக் கொண்டுள்ளனர். இது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

சிங்கப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை: 29 பேர் கைது – 100 பேர் மீது விசாரணை

இந்த நிலையில், சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களின் முழுமையான தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், அக்டோபர் 1- ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூர்வாசிகளில் 82 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டனர். 85 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக் கொண்டனர்.

சிங்கப்பூரில் மொத்தம் 9.24 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில் சுமார் 4.59 மில்லியன் பேர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ள மற்ற தடுப்பூசிகளை 1,02,915 பேர் போட்டுக் கொண்டனர். பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தகுதியுடைய 5,00,000 முதியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை சுமார் 2,58,043 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1,02,000 ஆக உள்ளது.