சிங்கப்பூர் விரைவில் மீண்டும் திறக்கப்படுவதை விரும்புவோர் பொறுமை காக்க வேண்டும் – அமைச்சர்

(Photo: India in Singapore/ Twitter)

சிங்கப்பூர் விரைவில் மீண்டும் திறக்கப்படுவதை விரும்புவோர், பொறுமை காக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டார்.

தினசரி பதிவாகும் புதிய கிருமித்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பற்றி மக்கள் அதிகம் கவலைப்படவோ அல்லது பயப்படவோ வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

S Pass மற்றும் work permit உடைய வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வர மீண்டும் அனுமதி

“சமூகத்தில் ஏற்பட்ட சமீபத்திய கோவிட் -19 பரவுதலை அடுத்து, கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்பட வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர், மறுமுனையில் உள்ளவர்கள் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.”

“சில நாட்களாக, தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டுவதை காணும்போது, ​​அது மிகவும் கவலையை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், எண்ணிக்கையைக் கண்டு பதற்றம் அடைய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தொற்று பாதிப்புக்கு ஆளாவோரை விட, தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் மீது கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் விரைவில் மீண்டும் திறக்க விரும்புவோரிடமிருந்து பொறுமை அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மாற்றம்