போலியான S$10,000 நோட்டை விற்க முயன்ற ஆடவர் – விசாரித்து வரும் போலீஸ்

counterfeit-10000-chinatown-failed
Numista website (for illustration only) / Shin Min Daily News.

பீப்பிள்ஸ் பார்க் சென்டரில் பணம் வசூலிப்பவரிடம் போலியான S$10,000 நோட்டை விற்க முயன்றதாகக் கூறப்படும் ஆடவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதில் சந்தேகத்திற்கிடமான வரிசை எண் இருந்ததைக் கடை உரிமையாளர் கவனித்த பிறகு, அதனை நிராகரித்துள்ளார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கு சிறை

இதனை அடுத்து பொதுமக்கள் போலீசாரை அழைத்தனர், ஆனால் அதிகாரிகள் வருவதற்குள் அந்த ஆடவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

உண்மையான S$10,000 பண நோட்டுகள், “0AA” மற்றும் “0YI” என்று தொடங்கும் வரிசை எண்களைக் கொண்டிருக்கும் என்று உரிமையாளர் கூறினார்.

ஆனால், ஆடவர் கொடுத்த போலியான நோட்டில் “2AA” என வரிசை எண் தொடங்கியதால், அதை பார்த்ததுமே போலி என கண்டறிந்ததாக அவர் சொன்னார்.

சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பெற இரண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக ஷின் மின் நியூஸ் தெரிவித்தது.

புகாரை பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் உறுதி செய்தனர்.

Work permit மற்றும் S$482.80 பணத்துடன் கீழே கண்டெடுக்கப்பட்ட பர்ஸ்.. உரியவரிடம் சேர உதவுங்கள்