சிங்கப்பூரில் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கு சிறை

சிங்கப்பூரில்
PHOTO: Today

சிங்கப்பூரில் சிறப்பு தேவையுடைய சிறுவனை அடித்து துன்புறுத்திய வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்ணுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாளியின் மகனான எட்டு வயதுச் சிறுவன், பள்ளிக்குத் தயாராவதில் மந்தமாக இருந்ததால் விரக்தியடைந்த பணிப்பெண் சிறுவனை தரையில் இழுத்து, அறைந்து, உதைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

Work permit மற்றும் S$482.80 பணத்துடன் கீழே கண்டெடுக்கப்பட்ட பர்ஸ்.. உரியவரிடம் சேர உதவுங்கள்

இந்நிலையில், சிறுவனைத் தானாக முன்வந்து காயப்படுத்திய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

அதன் பின்னர், 25 வயதான இந்தோனேசிய நாட்டை சேர்ந்த சகினா என்ற அந்த பணிப்பெண்ணுக்கு நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 21) மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாக்கும் உத்தரவு இருப்பதால் சிறுவனின் பெயர் மற்றும் குற்றம் நடந்த இடம் ஆகியவை வெளியாகவில்லை.

சகினா கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறுவனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கிறார்.

தனது முதலாளியின் நான்கு குழந்தைகளை கவனித்து, வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார்.

பிள்ளைகளை பள்ளிக்குத் தயார்படுத்தி, அவர்கள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதை உறுதி செய்வது தான் சகினாவின் பொறுப்பு.

ஆனால், தன்னுடைய பொறுப்புகளை மறந்த பணிப்பெண், சிறுவனை தாக்கி துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் கேமராவில் பிடிபட்டது.

லாரியில் பயணித்த 7 நண்பர்கள்.. மரத்தில் மோதி விபத்து.. இருவர் மரணம் – ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை