போலியான பண நோட்டுகளை நண்பர் உதவியுடன் தயாரித்த ஆடவருக்கு 5 ஆண்டு சிறை

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

போலியான பண நோட்டுகளை தயார் செய்த குற்றத்துக்காக ஆடவர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முகமது பர்ஹான் பருஸ் (Muhammad Farhan Farus) என்ற அந்த ஆடவர், முன்னர் இதே போன்றே குற்றத்தை செய்து 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாதசாரி மீது மோதிய பேருந்து – கவனக்குறைவாக இயக்கிய ஓட்டுநர் கைது

கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் வைத்திருந்த குற்றத்தையும், மேலும் கள்ள பண நோட்டுகளை நல்ல பணம் போன்று பயன்படுத்திய குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த குற்றச்செயலை இன்னொரு ஆடவர் உதவியுடன் அவர் சாங்கி தெற்கில் உள்ள காலியான கிடங்கில் மேற்கொண்டார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“ஏன்பா தேவையில்லை வேலை…” – இந்திய ஊழியருக்கு சிங்கப்பூரில் சிறை