சிங்கப்பூர் தங்க கட்டிகளை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி.. 500 பவுன், ரூ.3 கோடி மோசடி!

Couple cheating arrest TamilNadu

சிங்கப்பூரில் இருந்து குறைந்த விலைக்கு தங்க கட்டிகளை வாங்கி வந்ததாக சொல்லி தம்பதி ஒன்று, 30க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்தவர் 27 வயதான மாணிக்கம், மனைவி கயல்விழி இருவரும் மோசடி வேலையை தொழிலாக செய்துவந்துள்ளனர்.

ஜுவல் சாங்கி விமான நிலைய மேற்பரப்பு குழாயில் நீர் கசிவு..!

சிங்கப்பூர் தங்க கட்டிகளை பாதி விலைக்கு வாங்கி தருவதாக, தம்பதி இருவரும் 30 பேரிடம் ரூ.3 கோடி பணத்தை வசூல் செய்துள்ளனர். மேலும், அவர்கள் தங்க கட்டிகளுக்கு பதிலாக நகைகள் தரலாம் என்றும் மோசடி செய்துள்ளனர்.

நகைகளை அகில் என்பவர் பணிபுரியும் அடகுக்கடையில் கொண்டு கொடுக்கும்படியும் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 500 பவுனுக்கு மேல் பொதுமக்கள் அகிலிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதமாக பத்திரமும் தந்துள்ளனர்.

ஒருநாள், அந்த 3 பேரும் தங்கம், பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், கயல்விழி தம்பதியினரை காவல்துறை தேடி வந்தது.

சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் கோவை ஒண்டிப்புதூரில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பின்னர், கோவை சென்ற காரைக்குடி காவல்துறை பதுங்கியிருந்த ஜோடியை கைது செய்தது. ஆனால், அவர்களுடன் அகில் என்பவர் இல்லை.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

சிங்கப்பூர் வெள்ளை காண்டாமிருக வளாகத்துக்குள் குதித்து “டிக்டாக்”- காவல்துறை விசாரணை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…