சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியதாக தம்பதி மீது குற்றசாட்டு..!

முதல் நாள் வேலையில் ஈடுபட்டு இருந்த வீட்டு பணிப்பெண்ணை தாக்கியதாக பெண் ஒருவர் மீதும் அவரது பின்பு அவரது கணவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருமதி அமன்தீப் கவுர் என்ற அந்த பணிப்பெண்ணை சுமார் இரண்டு மாதங்கள் துன்புறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவரது கணவரும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் இனி சுலபமாக தங்களுடைய பணத்தை சொந்த ஊருக்கு அனுப்பலாம்..!

செங்காங்கின் ரிவர்வேல் கிரசெண்டில் உள்ள HDB பிளாக் ஒன்றின் நான்காவது மாடியில் ஜன்னல் வழியாக பணிப்பெண் இறுதியாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஹா தெஹ்ஸீன் மற்றும் அவரது கணவர் முகமது தஸ்லீம், இந்திய நாட்டைச் சேர்ந்த திருமதி கவுரை சரியாக வேலை செய்யவில்லை என்று தாக்கியுள்ளனர்.

2016ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபர்ஹா, கவுரை பலமுறை தாக்கியுள்ளார். மேலும் அவரை கம்பை வைத்து அடிப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

தஸ்லீம் இரண்டு சந்தர்ப்பங்களில் அந்த பணிப்பெண்ணை தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆவார்கள். இந்நிலையில், ஃபர்ஹா மற்றும் தஸ்லீம் ஆகியோருக்கு ஆகஸ்ட் 21ம் தேதி தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணிப்பெண் துப்புறுத்தப்பட்ட எண்ணிக்கை ஒவ்வொன்றின் அடிப்படையில், குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் $7,500 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் புதிய 4 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – 400க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!