COVID-19: சிங்கப்பூரில் குணமடைந்தோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!

COVID-19: 1,712 have fully recovered in Singapore
COVID-19: 1,712 have fully recovered in Singapore

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து மீண்டு 78 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது மொத்தம் 1,712 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 768 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

மேலும் 1,376 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 17,831 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கவைக்க இரு அரசாங்க இடங்கள்…!