COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கவைக்க இரு அரசாங்க இடங்கள்…!

COVID-19: Former Nexus International School, Ngee Ann Poly staff apartments to house migrant workers in essential services
COVID-19: Former Nexus International School, Ngee Ann Poly staff apartments to house migrant workers in essential services (Photo: international-schools.org)

COVID-19 பரவல் சூழலில், Kismis Avenue மற்றும் Ulu Pandan சாலையில் காலியாக உள்ள இரண்டு அரசு சொத்துக்கள் ஆரோக்கியமாக உள்ள வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைக்க பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அத்தியாவசியச் சேவைகளில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் அங்கு தங்க வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 725 பேர் பாதிப்பு..!

தங்கும் விடுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு மாற்று இடவசதிகளைக் கண்டறிய மற்ற அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் நில ஆணையம் (LTA) வியாழக்கிழமை (மே 7) தெரிவித்துள்ளது.

இந்த வாரம் ஊழியர்கள், 90, 92 மற்றும் 94 Kismis அவென்யூவில் உள்ள முன்னாள் Ngee Ann பாலிடெக்னிக் ஊழியர்கள் குடியிருப்பு வசதிகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 201 Ulu Pandan ரோட்டில் உள்ள முன்னாள் நெக்ஸஸ் சர்வதேச பள்ளி புதுப்பிக்கப்பட்டு, வரும் ஜூன் மாத தொடக்கத்தில் தயாராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

[Supporting our Essential Workers ??]I would like to share that as part of Singapore’s fight against COVID-19, and to…

Posted by Christopher de Souza on Sunday, May 3, 2020

இந்த தளங்கள் 1,000 படுக்கை வசதிகளை அமைக்க திறன் கொண்டவை, மேலும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் ஆரோக்கியமான ஊழியர்கள் இங்கு தங்க வைக்கப்படுவர்.

மேலும், பிற வசதிகள் மற்றும் உணவு ஆகியவை வழங்கப்படும். முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு வேலைக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளை வழங்குவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 234 பயணிகளுடன் ஏர் இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ விமானம் சிங்கப்பூரிலிருந்து டெல்லி புறப்பட்டது..!