சிங்கப்பூரில் மேலும் 425 பேர் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!

COVID-19: 425 cases have been discharged from hospitals
682 new covid-19 cases in singapore

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 425 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 9) குறிப்பிட்டுள்ளது.

அதாவது மொத்தம் 2,721 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து இந்தியா புறப்படும் விமானங்களில் முதன்மை பட்டியலில் தமிழகம் இல்லை – அடுத்து எப்போது..!

மேலும் 1,097 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 19,498 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : இனிமேல் ஸ்கூட் விமானப் பயணிகள் 3 கிலோ வரை மட்டுமே பொருள்களை கையில் எடுத்துச் செல்லமுடியும்..!