சிங்கப்பூரில் 3 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்; வெளிநாட்டு ஊழியர்கள் 457 பேர் பாதிப்பு..!

(Photo by Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 16) நிலவரப்படி, புதிதாக 465 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 27,356ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க : சிங்கப்பூரில் புதிதாக 465 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் மூன்று பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புதிய சம்பவங்களில் சமூக அளவில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது. இதில் நான்கு சிங்கப்பூரர்கள் மற்றும் வேலை அனுமதி பெற்றவரும் அடங்குவர். சிங்கப்பூரர்களில் ஒருவர் 31 வயதான தங்கும் விடுதி ஆய்வாளர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சம்பவங்களில் 99 சதவீதம், முன்பு அறியப்பட்ட நோய் குழுமங்களுடன் தொடர்பு உள்ளதாகவும் MOH தெரிவித்துள்ளது.

புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில் 3 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 9 Sungei Kadut Way
  • 7 Tech Park Crescent
  • 137 Tuas View Square

இறப்பு

COVID-19 கிருமித்தொற்று காரணமாக 67 வயதான சிங்கப்பூர் ஆடவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் சேர்ந்து நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – மொத்தம் 22ஆக உயர்வு..!