சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட COVID-19 சுவாச பரிசோதனை கருவிக்கு தற்காலிக ஒப்புதல்

COVID-19 breath test gets provisional authorisation in Singapore, to undergo trial at land checkpoint
(Photo: NUS)

ஒரு நிமிடத்திற்குள் முடிவுகளை வழங்கும் திறன்படைத்த, சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட COVID-19 சுவாச பரிசோதனை கருவிக்கு சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தற்காலிக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் நிறுவனமான ப்ரீதோனிக்ஸ், இந்த ப்ரெஃபென்ஸ் கோ கோவிட் -19 (BreFence Go COVID-19) சோதனை கருவியை உருவாக்கியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக ஊழியர் ஒருவருக்கு தொற்று – விவரம்

சிங்கப்பூரில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெறும் முதல் சுவாசப் பரிசோதனைக் கருவி என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சோதனை முறையை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்துடன் (MOH) இணைந்து ப்ரீதோனிக்ஸ் நடத்துகிறது.

இந்த சுவாசப் பரிசோதனை, தற்போதைய கட்டாய COVID-19 ஆன்டிஜென் விரைவு சோதனையுடன் (ART) மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விமானங்கள் மட்டுமே இந்தியா-சிங்கப்பூர் இடையில் இயக்கப்படுகின்றன – ஒவ்வொரு நாளும் 25 பயணிகள் சிங்கப்பூர் வருகை