சிங்கப்பூரில் புதிதாக 42 பேருக்கு COVID-19 பாதிப்புகள் – MOH

COVID-19 cases in Singapore
(Photo: MOM)

சிங்கப்பூரில் இன்றைய (ஜனவரி 10) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 42 பேருக்கு COVID-19 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டை மீறி சாலை தடுப்பில் சீறிப்பாய்ந்த கார் (காணொளி) – 3 பேர் மருத்துவமனையில்…

அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடையே பதிவான தொற்றுநோய்களின் அதிக எண்ணிக்கை இதுவாகும்.

உள்நாட்டில் எந்த புதிய பாதிப்பும் பதிவாகவில்லை.

கூடுதல் விவரங்கள் குறித்து இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

கோவிட் -19: 234 ஊழியர்களுக்கு கிருமித்தொற்று சிறப்பு சோதனை..

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…