கிருமி பரவல் குழுமத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி

Google Maps

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் மொத்தம் 12 பெரிய கிருமித்தொற்று குழுமங்களை கண்காணித்து வருவதாக பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் உட்லண்ட்ஸ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

கட்டுமானப் பகுதியில் லாரி மோதிய விபத்தில் இந்திய ஊழியர் மரணம்

உட்லண்ட்ஸ் தங்கும் விடுதியில் புதிதாக 8 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 54 பேருக்கு நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.

கண்காணிப்பில் உள்ள மற்ற இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், blue stars dormitory மற்றும் avery lodge dormitory ஆகியவை ஆகும்.

அவெரி லாட்ஜ் (Avery Lodge) தங்கும் விடுதியில் புதிதாக 17 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது, மொத்தம் 160 பேருக்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல, Blue stars தங்கும் விடுதியில் புதிதாக 22 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது, மொத்தம் 159 பேருக்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த மல்யுத்த வீரர் WWE அறிமுக போட்டியில் அபார வெற்றி