கொரோனா: சிங்கப்பூரில் மேலும் 3 பேர் உயிரிழப்பு – செப்டம்பரில் மட்டும் இதுவரை 18 இறப்புகள் பதிவு

(Photo: Today)

சிங்கப்பூரில் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. அதனையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த செப்டம்பரில் மட்டும் இதுவரை 18 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மாதாந்திர இறப்பை சமன் செய்கிறது.

இரு பணிப்பெண்களின் உயிரை பறித்த லக்கி பிளாசா விபத்து – வெளிநாட்டு ஓட்டுனருக்கு சிறை

முதல் நபர்

இவர் 79 வயதான சிங்கப்பூரர் ஆடவர். கடந்த செப்டம்பர் 8 அன்று அவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை நோய் காரணமாக ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களால் உயிரிழந்தார்.

அந்த ஆடவர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று MOH கூறியுள்ளது. அவருக்கு சில நாள்பட்ட மருத்துவ பிரச்சனைகள் இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

இரண்டாம் நபர்

இவர் 83 வயதான சிங்கப்பூர் ஆடவர், இவருக்கு கடந்த செப்டம்பர் 14 அன்று கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரும் நேற்று வெள்ளிக்கிழமை COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இவர் கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டவர், ஆனால் இவருக்கு நீரிழிவு நோய், நுரையீரல் நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் முன்னரே இருந்துள்ளது.

மூன்றாம் நபர்

இவர் 86 வயதான சிங்கப்பூரர், இவருக்கு கடந்த செப்டம்பர் 16 அன்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரும் நேற்று வெள்ளிக்கிழமை COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இவருக்கு கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி முழுமையாக போடப்பட்டது, இருப்பினும் இவருக்கு நாள்பட்ட நுரையீரல் நோய், இதய நோய், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளது.

செப்.27 முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?