தொடரும் உயிரிழப்பு – மேலும் 3 பேர் கிருமித்தொற்றால் மரணம்

Pic: Today/File

சிங்கப்பூரில் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. அதனையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த செப்டம்பரில் மட்டும் இதுவரை 21 இறப்புகள் பதிவாகியுள்ளன, இது ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மாதாந்திர இறப்பை தாண்டியது.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 6 பேர் கைது – காட்டுப்பகுதியில் கண்டுபிடிப்பு

உயிரிழந்த அந்த 3 பேருக்கும் ஏற்கனவே நாள்பட்ட வேறு மருத்துவப் பிரச்சினைகளும் இருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் நபர்

இவர் 62 வயதான சிங்கப்பூரர் ஆடவர். கடந்த செப்டம்பர் 6 அன்று அவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று சனிக்கிழமை நோய் காரணமாக ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களால் அவர் உயிரிழந்தார் என்று MOH கூறியுள்ளது.

அந்த ஆடவர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொள்ளவில்லை (முதல் டோஸ் மட்டும் போட்டுள்ளார்) என்றும் MOH கூறியுள்ளது.

இரண்டாம் நபர்

இவர் 71 வயதான சிங்கப்பூர் ஆடவர், இவருக்கு கடந்த செப்டம்பர் 8 அன்று கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவரும் நேற்று முன்தினம் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்தார் என்று MOH கூறியுள்ளது.

இவர் கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டவர்.

மூன்றாம் நபர்

இவர் 71 வயதான சிங்கப்பூர் பெண்மணி, இவருக்கு கடந்த செப்டம்பர் 14 அன்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று சனிக்கிழமை COVID-19 தொற்று காரணமாக இவர் உயிரிழந்தார்.

இவர் கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர் என்று MOH கூறியுள்ளது.

லிட்டில் இந்தியாவில் உள்ள மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய 9 பெண்கள் கைது.!