சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 6 பேர் கைது – காட்டுப்பகுதியில் கண்டுபிடிப்பு

unlawful entry arrested
Photo: Darren Sim

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நுழைந்த 19 முதல் 51 வயதுக்குட்பட்ட 6 பேரை நேற்று (செப். 24) போலீசார் கைது செய்துள்ளனர்.

கிளெமெண்டியில் உள்ள Sunset Wayயில் போலீஸ் வாகனங்கள் காணப்பட்டதாகவும், காவல்துறை அவசர சம்பவத்திற்கு வருகை தந்ததாகவும் மதர்ஷிப் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் வேலையிட நடவடிக்கைகள் கடுமை: வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயம்

மத்திய போலீஸ் பிரிவு, கிளெமென்டி போலீஸ் பிரிவு உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் பின்னர் உறுதி செய்தனர்.

Toh Tuck சாலை/கிளெமென்டி பார்க் மற்றும் புக்கிட் பத்தோக் Nature Reserve அருகில் உள்ள காடுகளில் இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, முறையான குடிநுழைவு ஆவணங்கள் இல்லாமல் ஆறு பேர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் மூன்று பிரம்படியும் விதிக்கப்படலாம்.

கொரோனா: சிங்கப்பூரில் மேலும் 3 பேர் உயிரிழப்பு – செப்டம்பரில் மட்டும் இதுவரை 18 இறப்புகள் பதிவு