சிங்கப்பூரில் வேலையிட நடவடிக்கைகள் கடுமை: வீட்டிலிருந்து வேலை செய்வது கட்டாயம்

Photo: Getty

சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வீட்டிலிருந்து வேலை செய்ய சாத்தியமுள்ள ஊழியர்களுக்கு அதனை காட்டாயமாக்க உள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு, செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 24 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

கொரோனா: சிங்கப்பூரில் மேலும் 3 பேர் உயிரிழப்பு – செப்டம்பரில் மட்டும் இதுவரை 18 இறப்புகள் பதிவு

முன்பு, வீட்டில் இருந்து வேலை செய்ய சாத்தியமுள்ள அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்கள் எந்த நேரத்திலும் பணியிடத்தில் வேலைசெய்ய அனுமதிக்கப்பட்டனர்.

பணியிடங்களுக்கு வேலைக்குச் செல்ல கட்டாயம் உள்ள ஊழியர்கள், பல வேலைத்தளங்களில் உள்ள ஊழியர்களுடன் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளுதல் தொடர்ந்து இருக்கக்கூடாது என்றும் அது கூறியுள்ளது.

அதே போல, பணியிடங்களில் சமூக ஒன்றுகூடுதல் தொடர்ந்து அனுமதிக்கப்படாது. எளிதில் மாற்றப்படக்கூடிய வகையில் முதலாளிகள் வேலை நேரங்களை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்கள்

வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் விற்பனையாளர்கள், வாரம் ஒருமுறை ART சோதனை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இது, தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்களை வேலைக்குச் செல்வதைத் தடுப்பதற்காகவும், தங்கள் பணியிடத்தைப் பாதுகாப்பாக வைத்திக்கவும் உதவும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்கள், தற்காலிக காரணங்களுக்காக பணியிடத்திற்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், அந்த இடத்திற்கு செல்வதற்கு முன் ART சோதனை மூலம் “நெகடிவ்” முடிவு பெற்ற பிறகு தான் அங்கு செல்லலாம் என MOH சுட்டிக்காட்டியது.

இரு பணிப்பெண்களின் உயிரை பறித்த லக்கி பிளாசா விபத்து – வெளிநாட்டு ஓட்டுனருக்கு சிறை