லிட்டில் இந்தியாவில் உள்ள மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய 9 பெண்கள் கைது.!

three unlicensed massage outlets
Pic: SPF

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் மூன்று மசாஜ் நிலையங்களில், செப்டம்பர் 16 மற்றும் 17ம் தேதிக்கு இடையே காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

போலீஸார் மேற்கொண்ட சோதனையைடுத்து, லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள மூன்று மசாஜ் நிலையங்களிலிருந்து 9 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் வேலை தேடுவோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது; மனிதவள அமைச்சர்.!

மசாஜ் நிலைய சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் அந்த மூன்று நிலையங்களைச் சேர்ந்த 9 பெண் பணியாளர்கள் 22 வயது முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர் ஆவார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள 9 பெண்கள் என்ன குற்றங்கள் செய்தனர் என்பதை காவல்துறையினர் குறிப்பிடவில்லை. இருப்பினும், விசாரணை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

மசாஜ் நிலையத்தை உரிமம் இன்றி நடத்துவோருக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். மீண்டும் குற்றம் புரிபவர்களுக்கு 20,000 வெள்ளி வரையிலான அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

கொரோனா: சிங்கப்பூரில் மேலும் 3 பேர் உயிரிழப்பு – செப்டம்பரில் மட்டும் இதுவரை 18 இறப்புகள் பதிவு