கொரோனா: சிங்கப்பூரில் புதிதாக 9 பேர் உயிரிழப்பு – MOH

Pic: Today/File

சிங்கப்பூரில் நேற்றைய (அக்டோபர் 10) நிலவரப்படி, புதிதாக 2,809 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் புதிதாக 9 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண திட்டம் – முன்பதிவுக்காக முடங்கிய விமான இணையதளம்

உயிரிழந்தவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள், இதில் 70 முதல் 88 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவர்.

அவர்களில், நான்கு பேர் கோவிட் -19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, மேலும் மூன்று பேர் முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்கள்.

மீதமுள்ள இரண்டு பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூர் வரலாம்.. மேலும் எட்டு நாடுகளுக்கு திட்டம் விரிவு