தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண திட்டம் – முன்பதிவுக்காக முடங்கிய விமான இணையதளம்

SIA website crashes
SIA website

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண திட்டத்தின்கீழ், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் நீட்டிக்கப்படும் என்று சிங்கப்பூர் நேற்று (அக்டோபர் 9) அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) இணையதளம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொழில்நுட்ப சிக்கல்களைச் சந்தித்தது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூர் வரலாம்.. மேலும் எட்டு நாடுகளுக்கு திட்டம் விரிவு

SIA வலைத்தளம் தொழில்நுட்ப சிக்கல்களைச் சந்தித்து வருகிறது, அவற்றைச் சரிசெய்ய அவர்களின் குழு கடுமையாக உழைத்து வருவதாக SIA தனது இணையதளத்தில் கூறியது.

மேலும், அவசர உதவி தேவைப்பட்டால், உள்ளூர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும் அது பரிந்துரை செய்தது. ஏதேனும் சிரமம் இதனால் ஏற்பட்டால் நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், என்றும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டது.

SIA வலைத்தளம் தற்காலிகமாக சில நிமிடங்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தது. வாடிக்கையாளர்கள் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வலைத்தளத்தை மீண்டும் அணுக முடியும், மேலும் விமான அட்டவணைகள் மற்றும் விமானங்களை முன்பதிவும் செய்ய முடியும் என்றும் அது பின்னர் கூறியது.

“எங்கள் வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் ” என்றது.

தடுப்பூசி போட்டிருந்தால் தனிமை இல்லை.. கூடுதலாக விமானங்களை அறிமுகப்படுத்தும் SIA, ஸ்கூட்!