தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூர் வரலாம்.. மேலும் எட்டு நாடுகளுக்கு திட்டம் விரிவு

Changi Airport

சிங்கப்பூர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண திட்டத்தை மேலும் எட்டு நாடுகளுக்கு விரிவுப்படுத்த உள்ளது.

இந்த திட்டம், COVID-19க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமை இல்லாமல், சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கும்.

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் புதிதாக 11 பேர் உயிரிழப்பு

வரும் அக்டோபர் 19 முதல், இந்த சிறப்பு பயண ஏற்பாடு திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கனடா, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், UK மற்றும் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் “முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள்” இந்த பயண ஏற்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

இதனை சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAS) நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 9) அறிவித்தது.

கடந்த மாதம் இந்த சிறப்பு தடுப்பூசி திட்டத்தில் தொடங்கப்பட்ட புருனே மற்றும் ஜெர்மனியுடனான முதல் இரண்டு பயணத்தில் இருந்து, அனுபவமும் நம்பிக்கையும் கிடைத்த பிறகு சமீபத்திய இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும், தென் கொரியாவுடன் பயணத்தை சிங்கப்பூர் அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2021ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் பணியிடங்களில் பணியாற்றிய 82 பேருக்கு கோவிட்-19 தொற்று!