சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் புதிதாக 11 பேர் உயிரிழப்பு

Photo: Yahoo

சிங்கப்பூரில் நேற்றைய (அக்டோபர் 9) நிலவரப்படி, புதிதாக 3,703 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் புதிதாக 11 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

2021ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் பணியிடங்களில் பணியாற்றிய 82 பேருக்கு கோவிட்-19 தொற்று!

அவர்கள் 56 முதல் 90 வயதுக்குட்பட்ட 5 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 4 பேர் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை, மேலும் 4 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

மீதமுள்ள மூன்று பேர் முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்கள்.

அதி 10 பேருக்கு பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

மீதமுள்ள ஒருவர், அதாவது ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு எந்த அடிப்படை மருத்துவ பிரச்சினைகளும் இல்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153ஆக உயர்ந்துள்ளது.

“புதிய நிலையை அடைய மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம்”- பிரதமர் லீ உரை!