தடுப்பூசி போட்டிருந்தால் தனிமை இல்லை.. கூடுதலாக விமானங்களை அறிமுகப்படுத்தும் SIA, ஸ்கூட்!

SIA, Scoot
Scoot

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத் திட்டத்தின்கீழ் விமானங்களை மேலும் ஒன்பது நகரங்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விரிவுபடுத்தியுள்ளது.

நேற்று (அக். 9) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண திட்டத்தை மேலும் எட்டு நாடுகளுக்கு சிங்கப்பூர் விரிவுபடுத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டது, அதனை தொடர்ந்து SIA அதனை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூர் வரலாம்.. மேலும் எட்டு நாடுகளுக்கு திட்டம் விரிவு

SIA சேவையை அறிமுகம் செய்யும் நகரங்கள்:

  • ஆம்ஸ்டர்டாம் (Amsterdam)
  • பார்சிலோனா
  • கோபன்ஹேகன் (Copenhagen)
  • லண்டன்
  • லாஸ் ஏஞ்சல்ஸ்
  • மிலன் (Milan)
  • நியூயார்க்
  • பாரிஸ்
  • ரோம்

வரும் அக்டோபர் 19 முதல், மேற்கண்ட நகரங்களிலிருந்து தடுப்பூசி சிறப்பு திட்டத்தில் SIA விமானங்களை இயக்கும்.

இந்த விமான நிறுவனம் ஏற்கனவே புருனேயின் பந்தர் செரி பெகவான் மற்றும் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் (Frankfurt) மற்றும் முனிச் (Munich) ஆகிய இடங்களுக்கு தடுப்பூசி பயணப் பாதை திட்டடத்தில் விமானங்களை இயக்குகிறது.

ஸ்கூட் விமானம்

இதற்கிடையில், ஸ்கூட் விமானம், அக்டோபர் 20 முதல் பெர்லினில் இருந்து இந்த திட்டத்தின்கீழ் விமானங்களை இயக்கும்.

இந்த ஏற்பாட்டின் கீழ், COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள் குறிப்பிட்டு கூறப்பட்ட நாடுகளுக்கு செல்லலாம் மற்றும் தனிமைப்படுத்தல் இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழையலாம்.

இருப்பினும், புறப்படுவதற்கு முன்பும் வருகையின் போதும் PCR சோதனைகளை எடுக்க வேண்டும்.

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் புதிதாக 11 பேர் உயிரிழப்பு