சிங்கப்பூரில் டாக்ஸி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி!

(Photo: TODAY)

சிங்கப்பூரில் டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் அரசாங்கத்திடமிருந்து கூடுதலாக S$133 மில்லியன் ஆதரவைப் பெற உள்ளனர்.

சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த கிருமித்தொற்று சூழலில் ஏற்பட்ட தாக்கத்தை ஈடுகட்டும் நோக்கில் இது அறிவிக்கப்பட்டுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) இன்று புதன்கிழமை (டிசம்பர் 16) தெரிவித்துள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்கள் அனைத்து நடைமுறைகளுக்கும் இணங்கினர்” – அமைச்சர் டான் பெருமிதம்!

COVID-19 ஓட்டுநர் நிவாரண நிதியத்தின் கீழ், ஓட்டுநர்கள் ஜனவரி முதல் மார்ச் வரை மாதத்திற்கு வாகனம் ஒன்றுக்கு S$600, ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் S$450 பெறுவார்கள்.

டாக்ஸி மற்றும் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் செலவுகளை குறைக்க முந்தைய திட்டத்தின் கீழ் மாதம் ஒரு வாகனத்திற்கு S$300 வழங்கப்பட்டது, அதற்கு மாற்றாக இந்த புதிய திட்டம் வந்துள்ளது.

பழைய சிறப்பு நிவாரண நிதிக்கு தகுதியான சுமார் 52,000 ஓட்டுநர்கள், தற்போது ஜனவரி முதல் தானாகவே COVID-19 ஓட்டுநர் நிவாரண நிதிக்கு மாற்றப்படுவார்கள்.

ஆனால் , சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தால் இன்று அறிவிக்கப்பட்ட புதிய COVID-19 மீட்பு மானியத்திற்கு, COVID-19 ஓட்டுநர் நிவாரண நிதியைப் பெறுபவர்கள் தகுதி பெற மாட்டார்கள்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி, சென்னை, மதுரை செல்லும் விமானங்களுக்கான புதிய அட்டவணை!

வேலை அனுமதி, S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…