வேலை அனுமதி, S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்!

singapore job foreign workers workplace rules
(Photo: Roslan Rahman/ Getty Image)

வணிகங்கள் எதிர்கொள்ளும் மனிதவள பற்றாக்குறையை போக்க அனைத்து துறைகளிலும் புதிய வேலை அனுமதி (work permit) மற்றும் S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதாக தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சகம், தேசிய வளர்ச்சி அமைச்சு மற்றும் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து மனிதவள அமைச்சகம் (MOM) இதனை நடைமுறையில் கொண்டுவரும் என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட பெண் மனநலச் சட்டத்தின் கீழ் கைது!

புதிய வேலை அனுமதி மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள ஊழியர்களின் S Pass விண்ணப்பங்களை சிறந்த முறையில் வணிகங்களுக்கு ஆதரவாக அது ஈடுகட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளிலிருந்தும் வரலாம்

முன்னர், சீனா போன்ற குறைந்த தொற்று பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வரும் ஊழியர்களை மட்டுமே புதிதாக மனிதவள அமைச்சு அனுமதித்து வந்தது.

தற்போது அனைத்து நாடுகளிலிருந்தும் விண்ணப்பங்களை அங்கீகரிக்கும், மேலும் சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ஊழியர்கள் குறிப்பிட்ட துறைகளில் மட்டும் வேலை செய்வதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனிதவள பற்றாக்குறை

சிங்கப்பூரின் COVID-19 பரவல் நிலையாக இருப்பதால், பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சோதனை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, மனிதவள பற்றாக்குறையை குறைக்க, வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் வருவதற்கு அதிக இடம் அளிக்கமுடிவதாக MOM கூறியுள்ளது.

ஏற்கெனவே வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் சிங்கப்பூர் வருவதற்கும் அனுமதியை MOM வழங்க தொடங்கியுள்ளது.

இந்தியா கட்டுமான ஊழியர்கள்

கட்டுமானத் துறை, வெளிநாட்டுத் ஊழியர்களை, குறிப்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்தவர்களை பெரிதும் நம்பியுள்ள ஒரு துறை ஆகும், ஊழியர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க அந்த துறை போராடி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் வரும் பயணிகளுக்காக புதிய பயண முறை!

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…