அனைத்து நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் வரும் பயணிகளுக்காக புதிய பயண முறை!

குறுகிய காலம் தங்குவதற்கு, வர்த்தக பயணிகளை இலக்காகக் கொண்ட புதிய பயண முறையை சிங்கப்பூர் அறிமுகம் செய்யவுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) இன்று (டிசம்பர் 15) அறிவித்தார்.

அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் வர்த்தக, உத்தியோகபூர்வ மற்றும் பொருளியல் துறை சார்ந்த அதிகாரிகள், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

இதில் அவர்கள் 14 நாட்கள் வரை சிங்கப்பூரில் தங்கியிருக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயண முறைக்கு வரும் ஜனவரி 2021 நடுப்பகுதியில் விண்ணப்பிக்கலாம், மேலும் ஜனவரி இரண்டாம் பாதியில் இருந்து பயணிகள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

உலகளாவிய பயணம், குறிப்பாக உலகளாவிய வர்த்தக பயணம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் தேவையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு நாடுகளில் உள்ள பலர் வணிக நடவடிக்கைகளுக்காக ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திரு சான் தெரிவித்தார்.

இந்த பயண முறையில், வெளிநாட்டுப் பயணிகள் இங்கு தங்கும் நாட்களில் வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அவர்கள் தங்க முடியும்.

இந்த பயணிகளுக்கும் வழக்கமான PCR சோதனைகள் மேற்கொள்ளப்படும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஆம் கட்டம்: அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் – ஜோசபின் தியோ!

புதிதாக 16 பேருக்கு தொற்று.. வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவர் பாதிப்பு!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானம்..பேஸ்டில் மறைத்து வைத்த தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…