3ஆம் கட்டம்: அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் – ஜோசபின் தியோ!

office work Restrictions
Restrictions on work from office may be eased in phase 3 - Josephine Teo (PHOTO Credit: Ed Jones via AFP)

அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்தார்.

அலுவலகங்களுக்குத் திரும்புவதற்கான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த முடியுமா என்று பல அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு கலந்தோசித்து வருகிறது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

புதிதாக 16 பேருக்கு தொற்று.. வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவர் பாதிப்பு!

இதுபற்றிய சில அறிவிப்புகள் விரைவில் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும், அதற்கான உங்களுடைய பொறுமை எங்களுக்கு தேவை என்றும் திருமதி. தியோ குறிப்பிட்டுள்ளார்.

வரும் டிசம்பர் 28ஆம் தேதி சிங்கப்பூர் மூன்றாம் கட்டத்திற்கு செல்லும் என்று அரசாங்கம் அறிவித்த ஒரு நாள் கழித்து திருமதி தியோவின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

சமூகக் ஒன்றுகூடலுக்கான அனுமதிக்கப்பட்ட குழு அளவு 5லிருந்து எட்டு ஆக உயரும் என்றும், பொது இடங்களான மால்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கான அனுமதி வரம்புகள் அதிகரிக்கப்படும் என்றும் பிரதமர் லீ சியென் லூங் நேற்று கூறினார்.

இதுபற்றிய கூடுதல் தகவல்களை அவர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானம்..பேஸ்டில் மறைத்து வைத்த தங்கம் பறிமுதல்!

அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் இலவச COVID-19 தடுப்பூசி; ஆனால் கட்டாயமில்லை – பிரதமர் லீ

சிங்கப்பூர் 3ஆம் கட்டம்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு…!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…