இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

India farmers Singapore Police investigating
Police investigating online posts about gatherings in Singapore showing support for India farmers (AP Photo/Altaf Qadri)

இந்தியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் திரண்டு வருவதைக் காட்டும் பதிவுகள் சமூக ஊடகங்களில் காணப்பட்டன.

இதனை அடுத்து அதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சிங்கப்பூர் காவல் படை (SPF) இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) தெரிவித்துள்ளது.

3ஆம் கட்டம்: அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் – ஜோசபின் தியோ!

இந்த அடிப்படையிலான பொது கூட்டங்களுக்கு காவல்துறை எந்த அனுமதியையும் வழங்கவில்லை என்றும் அதிகாரிகள் செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர்.

“அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்வது அல்லது பங்கேற்பது சட்டவிரோதமானது.”

மேலும், மற்ற நாடுகளின் அரசியல் காரணங்களை ஆதரிக்கும் கூட்டங்களுக்கு எந்தவொரு அனுமதியையும் காவல்துறை வழங்காது என்றும் SPF தெளிவான நினைவூட்டலை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வருகை தரும் அல்லது வசிக்கும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் விசா அல்லது வேலை அனுமதி ரத்து செய்யப்படலாம் என்று SPF தெரிவித்துள்ளது.

புதிதாக 16 பேருக்கு தொற்று.. வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவர் பாதிப்பு!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானம்..பேஸ்டில் மறைத்து வைத்த தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…