சிங்கப்பூரில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட பெண் மனநலச் சட்டத்தின் கீழ் கைது!

woman arrested mental health act
43-year-old woman apprehended under mental health act near Ang Mo Kio Hub (PHOTO: Aizz Zboy/FB)

ஆங் மோ கியோ ஹப் ( Ang Mo Kio Hub) அருகே 43 வயதான பெண் ஒருவர் மனநலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட்ட வைரல் காணொளியில், ஒரு சில காவல் அதிகாரிகள் ஆங் மோ கியோவில் உள்ள போக்குவரத்து நிறுத்தத்தில் ஒரு பெண்ணைக் கட்டுக்குள் கொண்டுவருவதைக் காணலாம்.

அனைத்து நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் வரும் பயணிகளுக்காக புதிய பயண முறை!

இதில் சாலை சந்திப்புக்கு அருகே அந்த பெண், ஒழுங்கற்ற முறையில் ஆக்கிரோஷமாக நடந்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

நேற்று டிசம்பர் 14ம் தேதி மாலை 4:43 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

 

காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்து, அந்த பெண்ணை கட்டுப்படுத்த முயன்றனர், ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை, மேலும் கூச்சலிடத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

பெண்ணின் பாதுகாப்பு மற்றும் பிற சாலை பயனர்களின் பாதுகாப்பிற்காக, காவல்துறை அதிகாரிகள் அவரை தடுத்து பாதுகாப்பிற்கு கொண்டு வந்தனர்.

அந்த பெண் மனநலம் (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் போது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் குறித்து சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை!

3ஆம் கட்டம்: அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் – ஜோசபின் தியோ!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…