சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை தங்கவைக்க பள்ளி வளாகம் ஏற்பாடு..!

COVID-19: Former Qiaonan Primary School site in Tampines housing healthy foreign workers in essential services
COVID-19: Former Qiaonan Primary School site in Tampines housing healthy foreign workers in essential services (Photo: Singapore Land Authority)

முன்னாள் கியோனான் தொடக்கப்பள்ளி (Qiaonan Primary School) வளாகம், அத்தியாவசிய சேவைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைப்பதற்காக புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நில ஆணையம் (SLA) தெரிவித்துள்ளது.

15 டம்பைன்ஸ் ஸ்ட்ரீட் 11ல் உள்ள இந்த தளத்தில், சுமார் 500 பேர் தங்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சர்கியூட் பிரேக்கர் அதிரடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஆட்குறைப்பு அதிகமாகலாம் – மனிதவள அமைச்சர்..!

சமீபத்தில் ஊழியர்கள் அங்கு தங்கவைக்கப்படும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக ஆரோக்கியமான வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிக இடவசதிகளில் தங்கவைக்கப்படுகின்றனர்.

கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் பாதுகாப்பு ரோந்து பணிகளுடன் கூடிய வசதியுடன் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்களின் நலனுக்காக, அவர்களின் தேவைகள் மற்றும் உணவை வாங்குவதற்கு வசதியாக மினிமார்ட் உள்ளிட்ட வசதிகள் அந்த தளத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: COVID-19 சர்க்யூட் பிரேக்கருக்குப் பிறகு வேலையிடங்களில் ஒன்றுகூடவேண்டாம்: மனிதவள அமைச்சகம்…