சிங்கப்பூரில் எட்டு புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சகம்..!

migrant-workers-residing-kranji sata-commhealth-
(Photo: Vobis Enterprise)

சிங்கப்பூரில் நேற்றைய (ஏப்ரல் 22) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 1,016 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 10,141ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 15 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் 967 வெளிநாட்டு ஊழியர்களும், தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் 32 நபர்களும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய சம்பவங்களில் 73 சதவீதம், அறியப்பட்ட குழுக்களுடன் தொடர்புடையது, மீதமுள்ள சம்பவங்களின் தொடர்பு கண்டறியும் பணி நிலுவையில் உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கும், விடுதிகளுக்கு வெளியேயும் இனி செல்ல முடியாது..!

புதிய நோய் பரவல் குழுமங்கள்

எட்டு புதிய நோய் பரவல் குழுமங்கள் அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் மூன்று Tuas View Square-லும், இரண்டு Sungei Kadut அவென்யூவிலும் அமைந்துள்ளன.

  • 10 Kranji Link.
  • 32 Tuas View Square
  • 36 Tuas View Square
  • 40 Tuas View Square
  • 61 Senoko Drive
  • 8 Sungei Kadut Avenue
  • 18 Sungei Kadut Avenue
  • Lorong 14 Geylang-ல் அமைந்திருக்கும் Wing Fong Court

இறப்பு

சம்பவம் 1071 என அடையாளம் காணப்பட்ட, 84 வயதான சிங்கப்பூர் பெண், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு COVID-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களால் உயிரிழந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் மொத்தம் 12 உயிரிழப்புகள் இதுவரை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம் (MOH)..!