லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்திற்கு S$10,000 அபராதம்!

லிட்டில் இந்தியாவில் உள்ள பனானா லீப் அப்போலோ உணவகத்திற்கு, கோவிட்-19 விதிமுறைகளை மீறியதாக S$10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றம் சாட்டப்பட்ட உணவகத்தில், சென்ற ஆண்டு நடத்தப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோவிட்-19 விதிகளை மீறியதாக அந்த உணவகத்தின் மேலாளர் ஒப்புக்கொண்டார்.

“சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்களின் தேவை முக்கியம்”

மேலும், இதே போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிராங்க்கூன் ரோட்டில் லிட்டில் இந்தியா ஆர்க்கேட் என்ற கட்டிடத்தில் அமைந்துள்ள அந்த உணவகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி விதிமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அங்கு நடத்தப்பட்ட பிறந்தநாள் விழாவில் சுமார் 40 பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அப்போது இருந்த விதிகளின் படி 5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்று கூட கூடாது.

இசை நிகழ்ச்சிக்காக ஒலிபரப்பியும், பட ஒளிபரப்பு கருவியும் அங்கு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், அங்கு பபே முறையில் உணவு பரிமாறப்பட்டதாகவும், அதை அமர்ந்து உண்ண இருக்கைகள் நெருக்கமாக அம்மைக்கப்பட்டதாகவும் குற்றங்கள் பதிவாகின.

அந்த நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை நடத்தப்பட்டதாகவும், ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளி விடவேண்டும் என்ற விதிமுறை தகர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்வு கோவிட் தொற்றை பரப்பக்கூடிய மிகவும் ஆபத்தான ஒன்றாக கருதுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்டேப்ஃபானி கோ தெரிவித்துள்ளார். மேலும், அங்கு கோவிட்-19 தொற்று குழுமம் உண்டாக அனைத்து சாத்திய கூறுகளும் இருந்ததாக வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

இக்கட்டான சூழலில் உள்ள வெளிநாட்டு ஊழியருக்கு சொந்த ஊரிலிருந்து வந்த அன்பு பரிசு