இக்கட்டான சூழலில் உள்ள வெளிநாட்டு ஊழியருக்கு சொந்த ஊரிலிருந்து வந்த அன்பு பரிசு

நோன்பு பெருநாள் பண்டிகை உலகளவில் இஸ்லாமிய மக்களிடையே கொண்டாடப்படும் ஒன்று. இந்த பண்டிகையின் போது குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பையும் நல்லிணக்கத்தையும் பரிமாறிக்கொள்வர்.

எதிர்பாராவிதமாக ஏற்பட்ட தொற்று பரவலால் இந்த ஆண்டும் ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கு திரும்பி குடும்பங்களை சந்திக்க முடியவில்லை, இதற்கு விதிக்கப்பட்டுள்ள எல்லை கட்டுப்பாடுகளும் முக்கிய காரணம்.

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகரிப்பு – வலுவடையும் கட்டுப்பாடுகள்

இதில் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியாவை சேர்த்த ஊழியர் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மே 1ஆம் தேதி டிக்டாக்கில் பதிவிட்ட காணொளி ஒன்றில், தன் ஊரில் இருந்து தனக்கு ஒரு பரிசு வந்ததாகவும், அதை திறந்து பார்த்தபோது மிகவும் நெகிழ்ந்து, மகிழ்ச்சியடைந்ததாக கண்ணீருடன் பதிவிற்றிருந்தார்.

மிகவும் சிரித்த முகத்துடன் தன் கண்ணீரை துடைத்த படி இருந்த அந்த பதிவு அனைவரையும் நெகிழவைத்தது. அந்த பரிசு பெட்டிக்குள் உணவு பண்டங்கள், தொழுகைக்கு தேவையான பாய், ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் இருந்தன.

அந்த காணொளி நான்கு லச்சம் வியூஸ்கலை தாண்டி ஓடிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல இக்கட்டான நிலைமையை சந்தித்து வரும் பலரும் அந்த காணொளியில் அவர் அவர் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

கோவிட் -19 ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்