கோவிட் -19 ஆபத்து அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

(Photo: TODAY)

கிருமி பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை 21 நாட்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மேற்கொள்ளும்படி சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த விதிமுறை மே 7 இரவு 11.59 முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிமுறையின் படி வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு முன்னர், 14 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகரிப்பு – வலுவடையும் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியா, புருனே, சீனா, நியூசிலாந்து, தைவான், ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளை தவிர மத்த அனைத்து நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என அறிவித்துள்ளது.

மோசமடைந்து வரும் சூழல் காரணமாகவே பயணிகளின் பயண கால விவரங்களை கொண்டு, அவர்களின் 21 நாள் வீட்டில் தங்கும் அறிவிப்பு ஒழுங்குமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.

மேலும், தற்சமயம் 14 நாட்கள் வீட்டிலையே தங்கும் விதிமுறையின் கீழ் உள்ளவர்கள் மே 7ஆம் தேதியுடம் முடித்துக் கொள்ளாமல், மேலும் 7 நாட்கள் அவர் அவர் இடங்களிலையே இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகரிப்பு – வலுவடையும் கட்டுப்பாடுகள்

இந்த பயணிகள் அனைவர்க்கும் வருகையின் போது கோவிட்-19  PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் தனிமைப்படுத்தப்பட்ட 14 நாட்களில் இரண்டாவது சோதனையும், பின்னர் அவர்களின் தனிமைப்படுத்துதல் முடியும் போது இறுதி சோதனையும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாடுகளின் பயணிகளுக்கு சுகாதாரத்துறை பல கட்டுப்பாடு விதிமுறைகளை விதித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் யுகே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அதற்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 21 நாட்கள் தங்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது

தற்சமயம் 21 நாட்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை முடிக்க உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி அவர் அவர் தங்கும் இடங்களிலையே இருக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

பல் வலியால் அவதிப்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு, S$100 செலவில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் – குவியும் பாராட்டு