சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகரிப்பு – வலுவடையும் கட்டுப்பாடுகள்

(Photo: TODAY)

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, COVID-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படுகின்றன.

சமூக ஒன்று கூடல் உச்ச வரம்பு எட்டு பேரிலிருந்து 5ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிடங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் தீவிரம்

இந்த புதிய கட்டுப்பாடு மே 8 முதல் மே 30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வீடுகளுக்கும் பொருந்தும், நாள் ஒன்றுக்கு 5 பேர் மட்டுமே வருகைதர முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் அதிகபட்சம் இரண்டு சமூக ஒன்றுகூடல் மட்டுமே இருக்க அறிவுறுத்தப்படுவதாக என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

பல் வலியால் அவதிப்பட்ட வெளிநாட்டு ஊழியருக்கு, S$100 செலவில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் – குவியும் பாராட்டு