சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வெளிநாட்டு ஊழியர் மீது குற்றச்சாட்டு..!

Work-permit holder charged with bribing police officer with S$50 after breaching Covid-19 laws
Work-permit holder charged with bribing police officer with S$50 after breaching Covid-19 laws (Photo: TODAY)

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக 27 வயதான இளைஞர் மீது (மே 8) குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக CPIB செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், பூன் லே MRT நிலையத்தில் ஒரு பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிக்கு, சென் லாங் என்ற சீன நாட்டவர் S$50 லஞ்சம் கொடுக்க முயன்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் 328 நபர்கள் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!

அதாவது அனைத்து நபர்களும், தங்களின் வசிப்பிடத்தில் இல்லாத நேரத்தில் பொது இடங்களில் இருக்கும் போது மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை மறைத்து முகக் கவசம் அணிய வேண்டும்.

அவர் பொது இடத்தில் முகக் கவசத்தை முறையாக அணியாமல் இருந்ததாகவும் அதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரின் அந்த லஞ்சத்தை, சான் ஹுய் ஷி என்ற அதிகாரி வாங்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், COVID-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு உத்தரவு) விதிமுறைகளை மீறியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$100,000 வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 768 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!