சிங்கப்பூரில் அருங்காட்சியகங்கள், இந்திய பாரம்பரிய மையம் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும்..!

COVID-19: National Museum of Singapore, Asian Civilisations Museum to reopen on Jun 26
COVID-19: National Museum of Singapore, Asian Civilisations Museum to reopen on Jun 26 (Photo: National Museum of Singapore)

சிங்கப்பூரின் இரண்டாம் கட்டத் தளர்வு தொடங்கப்பட்ட நிலையில், சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகம் (National Museum) மற்றும் ஆசிய நாகரிக அருங்காட்சியகம் (Asian Civilisation Museum) வரும் ஜூன் 26 அன்று மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரிய மையம், மலாய் பாரம்பரிய மையம் மற்றும் Sun Yat Sen Nanyang நினைவு மண்டபம் ஜூலை 3ம் தேதி முதல் செயல்படும் என்று தேசிய பாரம்பரிய வாரியம் (NHB) தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஒரு பொது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரர்கள் சுதந்திரமாக மலேசியா வர அனுமதிக்கிறோம்; அதே போல மலேசியர்களை அனுமதிக்க வேண்டும் – மலேசியா..!

ஊழியர்கள் மற்றும் வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஜூன் 26 முதல் அருங்காட்சியகங்கள் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க அனுமதிக்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் நேஷனல் கேலரி சிங்கப்பூர் வரும் ஜூன் 26 அன்று மீண்டும் திறக்கப்படும் என்று அதன் வலைத்தளத்தின் ஆலோசனை தெரிவித்துள்ளது.

அருங்காட்சியக ஆபரேட்டர்கள், முழு இடத்தின் இயக்க திறனை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டும், ஒவ்வொரு வருகையாளர்களின் குழுவிலும் ஐந்து பேர் மட்டும் இருக்க வேண்டும், குழுக்களுக்கு இடையில் 1மீ பாதுகாப்பான இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து வருகையாளர்களும் ஊழியர்களும் முகக்கவசம் அணிய வேண்டும்.

வருகையாளர்களை ஆன்லைனில் டிக்கெட் வாங்கவும், பணம் செலுத்தவும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த சிறை கைதிக்கு நோய்த்தொற்று உறுதி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg