COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த சிறை கைதிக்கு நோய்த்தொற்று உறுதி..!

COVID-19: Latest infected inmate not linked to previous cases at Changi Prison
COVID-19: Latest infected inmate not linked to previous cases at Changi Prison (SCREENSHOT: Google Maps Street View)

சிங்கப்பூரில் சமூக அளவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சமூக நுழைவு அனுமதி பெற்ற சிறை கைதி அவர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

21 வயதான அந்த ஆடவர் எல்லை கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதற்கு முன்பு சிங்கப்பூர் வந்திருந்தார்.

இதையும் படிங்க : ஜுவெல் சாங்கியின் Rain Vortex அருவி, கடைகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் செயல்படும்..!

கடந்த ஜூன் 6 ஆம் தேதி சாங்கி சிறை சென்ற அவர், பொது கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதன் பின்னர் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டது என்று MOH மேலும் கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறைச்சாலையின் புதிய கைதிகள் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், சிறைச்சாலைக்கு வெளியில் உள்ள தனிமைப்படுத்தும் வசதியில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு முன்பு சிறைச்சாலையில் பாதிக்கப்பட்ட 4 பேருடன் அவருக்கு தொடர்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg