சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு..!

(PHOTO: Dhany Osman/Yahoo News Singapore)

சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட தளர்வு இன்று தொடங்கிய நிலையில், நீண்டகால அனுமதி உடையவர்களை அரசாங்கம் கூடுதலாக மீண்டும் அனுமதிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் குறுகிய கால வருகையாளர்களுக்கு தற்போது அனுமதி கிடையாது என்றும், சிறப்பு ஏற்பாடுகள் மூலம் வருவோரை தவிர, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டத் தளர்வு – மீண்டும் திறக்கப்படவுள்ள விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள்…!

தனிமைப்படுத்தல்:

இதில் குறிப்பாக நியூசிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா, புருணை, ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் குடிமக்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் சொந்த வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படலாம். மேலும் இது நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தாங்களே சொந்தமாக முன்பதிவு செய்துகொண்ட ஹோட்டல்களிலும் தங்கிக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருகை புரிவோர் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைகள் கட்டாயம்:

சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்துப் பயணிகளுக்கு கிருமித்தொற்று பரிசோதனைகள் கட்டாயமாக நடத்தப்படும்.

மீண்டும் அதே போல, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு முடிவதற்கு ஒருசில நாள்களுக்கு முன் பரிசோதனைகள் செய்யப்படும்.

இனி, அனைத்துப் பயணிகளும் பரிசோதனைக்கான செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதிக்கு முன்பாக சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் இறுதிக்குள் நாடு திரும்பும் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பரிசோதனைக்கான கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.

Source: Seithi MediaCorp

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்த பயணிகளுக்கு COVID-19 சோதனைகளின் கட்டணம் தள்ளுபடி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg