சிங்கப்பூரில் புதிதாக 845 பேருக்கு COVID-19 பாதிப்பு – வெளிநாட்டு ஊழியர் விடுதியில் 16 பேர் உறுதி

Singapore dormitory rent
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) நிலவரப்படி, புதிதாக 845 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் 587 பேர் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!

மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சின் (MOH) சமீபத்திய தொற்று புள்ளிவிவரங்களில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் சிங்கப்பூரில் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கையை 838ஆக உயர்ந்துள்ளது.

புதிய பாதிப்பு விவரம்:

  • உள்ளூர் அளவில்: 258
  • சமூக அளவில்: 242
  • வெளிநாட்டு ஊழியர் விடுதியில்: 16

ஞாயிற்றுக்கிழமை புதிதாக 327 பேருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் 218 பேர் மற்றும் உள்ளூர் அளவில்109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”