ஊழியர்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் கூடுதல் விரைவு சோதனை நிலையங்கள் – வரும் வாரங்களில் 120க்கு உயரும்

COVID-19 cases in Singapore
(Photo: MOM)

சிங்கப்பூர் திரும்பும் பயணிகள் மற்றும் சில துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோர் இனி கண்காணிப்பின்கீழ் சுயமாக ஆன்டிஜென் ரேபிட் சோதனைகளை (ART) வரும் வாரங்களில் மிக எளிதாகப் மேற்கொள்ள முடியும்.

தீவு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தனியார் விரைவு சோதனை நிலையங்களை அமைக்க மருத்துவ பயிற்சியாளர்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல் குழுக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) தெரிவித்துள்ளது.

இரும்புக் கம்பி மொத்தமாக விழுந்ததில் உடல் நசுங்கி வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்!

அடுத்த சில வாரங்களுக்குள் குறைந்தபட்சம் 60 கூடுதல் நிலையங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அத்தகைய நிலையங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 120ஆக அதிகரிக்கும்.

கேபிட்டாலேண்ட் (CapitaLand) மற்றும் ஃப்ரேசர்ஸ் பிராப்பர்ட்டி ரீடெய்ல் (Frasers Property Retail) போன்ற மால் ஆபரேட்டர்களின்கீழ் உள்ள சொத்துக்களில் உருவாக உள்ள நிலையங்களும் இதில் அடங்கும்.

ஃபார் ஈஸ்ட் ஹாஸ்பிடாலிட்டி குரூப், இன்டர் கான்டினென்டல் ஹோட்டல் குரூப், அக்கார் ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா ஆகியவற்றின் ஹோட்டல்களில் கீழ் உருவாக உள்ளவையும் இதில் அடங்கும்.

தற்போது, ​​60 விரைவுத் சோதனை நிலையங்கள் உள்ளன, அங்கு பயிற்சி பெற்ற பணியாளர்களின் மேற்பார்வையின் கீழ் சுயமாக ART சோதனைகளை பொதுமக்கள் செய்யலாம்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிக்கு கிருமித்தொற்று உறுதி – சென்னைக்கு மாதிரி அனுப்பி வைப்பு