சிங்கப்பூரில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்.. கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசை

(Photo Credit: SM Naheswari/TODAY)

சிங்கப்பூரில் கோவிட் -19 சமூக பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடுமையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.

அதில் ஒரு பகுதியாக, எஃப் & பி விற்பனை நிலையங்களில் சாப்பிடுது தடை செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து சூப்பர் மார்க்கெட்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கோவிட் -19 சமூக பாதிப்புகள் அதிகரிப்பு – கடுமையாகும் நடவடிக்கைகள்

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் மளிகை பொருட்களை அதிகமாக வாங்கி குவிக்க வேண்டாம் என்று இரண்டு பெரிய சூப்பர் மார்க்கெட்கள் வலியுறுத்தியுள்ளன.

NTUC FairPrice, Sheng Siong ஆகிய சூப்பர் மார்க்கெட்கள் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொறுமையாக இருக்கவும், மளிகை பொருட்கள் மற்றும் தேவையான பொருட்களை அதிகம் வாங்கி குவிக்க வேண்டாம் என்றும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்,” என்று கூறியுள்ளன.

(Photo: SM Naheswari/TODAY)

கடந்த வருடத்தை விட, மேம்பட்ட தயார் நிலையில் இருப்பதாகவும், தேவையான அளவு பொருள்கள் கையிருப்பு உள்ளதாகவும் அவை தெரிவித்தன.

சில சூப்பர் மார்க்கெட்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக Today குறிப்பிட்டுள்ளது, வாடிக்கையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சென்றதாகவும் அது கூறியுள்ளது.

சிங்கப்பூரில் 30 தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு விநியோகம்