சிங்கப்பூரில் கோவிட் -19 சமூக பாதிப்புகள் அதிகரிப்பு – கடுமையாகும் நடவடிக்கைகள்

(Getty Images)

சிங்கப்பூரில் கோவிட் -19 சமூக பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடுமையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டம் என பெயரிடப்பட்ட இந்த புதிய நடவடிக்கைகள் நாளை மே 16 முதல் ஜூன் 13 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட சமூக ஒன்றுகூடல்களில் தற்போது நடப்பில் உள்ள ஐந்து நபர்களிலிருந்து இரண்டு நபர்களாகக் குறைக்கப்படும்.

சிங்கப்பூரில் 30 தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு விநியோகம்

ஒரு வீட்டில் அல்லது பொது இடங்களில் சந்திக்கும் உச்ச அனுமதி எண்ணிக்கையும் இரண்டு நபர்களாகக் குறைக்கப்படுகிறது.

ஒரு வீட்டில் 2 பேர் மட்டுமே செல்லமுடியும் அல்லது 2 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்றும், மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்புள்ள ஊழியர்கள் அவ்வாறு செய்வதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை இடங்களில் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்தல் இருக்கக்கூடாது. வேலையிடத்தில் சமூகக் கூட்டங்களும் அனுமதி இல்லை.

இந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் மாற்றம்