வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்!

(Photo: Today)

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்ல “Exit pass” என்னும் வெளியேறும் முன்-அனுமதிக்கு விண்ணப்பிக்கத் வேண்டியதில்லை.

மேலும், சிங்கப்பூர் சமூக மக்களுக்காக இன்று (மார்ச் 24) அறிவிக்கப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

Breaking: VTL விமானங்கள் தேவையில்லை… அனைத்து பயணிகளும் ஏப்ரல் 1 முதல் தனிமையின்றி சிங்கப்பூர் வரலாம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு என்னென்ன மாற்றங்கள்?

பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்ல விரும்பும் ஊழியர்கள் Exit pass-க்கு முன் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், பொழுதுபோக்கு நிலையங்களுக்கு செல்ல தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Breaking: சிங்கப்பூரின் பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்; இந்திய பயணிகள் மகிழ்ச்சி!

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத விடுதி ஊழியர்கள் ART விரைவு சோதனை மேற்கொள்ள வேண்டும் என MOH கூறியுள்ளது.

சமூக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை மாற்றங்கள் விடுதி வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத விடுதி ஊழியர்கள் கண்டிப்பாக சமூக பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முன்னர் அறிவிக்கப்பட்ட வரம்பு எண்ணிக்கை நடப்பில் இருக்கும்:

வெளிநாட்டு ஊழியர்கள் சுமார் 15,000 வரை வார நாட்களில் சமூக பொது இடத்திற்கு செல்லலாம்.

குறிப்பாக, அனைவரும் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

கூடுதலாக, வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கையானது 30,000 வரை அதிகரிக்கப்படும்.

ஆனால் இனி செல்வதற்கு முன் எடுக்கப்படும் ART சோதனை (pre-visit ART) இருக்காது.

Breaking: ஊழியர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் வேலையிடங்களுக்கு திரும்ப அனுமதி!