கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளின் விலைகள் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட சில பிராண்டுகள் பாதியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Abbott’s Panbio ஆன்டிஜென் சுய-பரிசோதனை கருவிகள், S$13 வெள்ளியில் இருந்து S$5.95 வெள்ளிக்கு விற்கப்படுகிறது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் ஐந்து நோய்த்தொற்று பதிவு
கார்டியன் மற்றும் வாட்சன் மருந்தகங்களில் சுய-பரிசோதனை கருவியின் விலை குறைந்துள்ளதாக அவைகள் கூறியுள்ளன.
கார்டியன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மற்ற பிராண்டுகளும் மலிவான விலையில் கிடைப்பதாக கூறியுள்ளார்.
மேலும், Standard Qவின் ஒரு கருவி S$5.70க்கு விற்கப்படுகிறது, முன்னர் அது S$7.50 ஆக இருந்தது.
அதே போல, QuickVue பிராண்ட் இரண்டு கருவிகள் S$18.60க்கு விற்கப்படுகிறது, முன்னர் அது S$21.40க்கு விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் கூடுதலாக தெரிவுகள் கிடைக்கும்போது ART கருவிகளின் விலைகள் மேலும் குறையலாம் என்றும் அவர் கூறினார்.
இன்று (டிச. 7) முதல் VTL விமானம் மூலம் சிங்கப்பூருக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய நடைமுறை