கொரோனா வைரஸ்; பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் சிங்கப்பூர்..!

ஈரான், வடக்கு இத்தாலி அல்லது தென் கொரியா ஆகிய பகுதிகளுக்கு, 14 நாட்கள் சமீபத்திய பயணம் மேற்கொண்ட புதிய வருகையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழையவும் மற்றும் செல்லவும் சிங்கப்பூர் தடை செய்துள்ளது என்று தேசிய மேம்பாட்டுத் துறை அமைச்சர் லாரன்ஸ் வோங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, நாளை புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி; மினிபஸ் ஓட்டுநர் கைது..!

வெளிநாடுகளின் மூலம் எதிர்கொள்ளும் வைரஸ் சம்பவங்களின் அபாயத்தைக் குறைக்க சிங்கப்பூர் எடுக்கும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.

மேலும், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஈரானிய பாஸ்போர்ட்டுகளைக் கொண்டவர்களுக்கு அனைத்து வகையான புதிய விசாக்களையும் வழங்குவதை, குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) நிறுத்தி வைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்தகைய பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட குறுகிய கால மற்றும் Multiple-visit விசாக்களும் நிறுத்தப்படும். இந்த காலகட்டத்தில் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பின்வரும் நபர்களுக்கு புதன்கிழமை முதல் கட்டாயம் வீட்டில் தங்கும் நோட்டீஸ் (SHN) வழங்கப்படும்:

  • கடந்த 14 நாட்களுக்குள் ஈரான், வடக்கு இத்தாலி அல்லது தென் கொரியாவுக்கு சமீபத்திய பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள்
  • கடந்த 14 நாட்களுக்குள் ஈரான், வடக்கு இத்தாலி அல்லது தென் கொரியாவுக்கு சமீபத்திய பயணம் மேற்கொண்ட நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் (வேலை அனுமதி (work passes), மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதி, dependent’s pass மற்றும் நீண்ட கால வருகை அனுமதி உட்பட)

SHN கீழ், அத்தகைய பயணிகள் சிங்கப்பூர் திரும்பிய பின்னர் இரண்டு வார காலத்திற்கு எல்லா நேரங்களிலும் வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் உட்பட மேலும் இருவருக்கு COVID-19 தொற்று உறுதி..!