சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் உட்பட மேலும் இருவருக்கு COVID-19 தொற்று உறுதி..!

2 new cases reported: MOH
4 COVID-19 patients discharged from hospital, 2 new cases reported: MOH (Photo: Mothership)

சிங்கப்பூரில் COVID-19 தொற்றில் இருந்து மேலும் நான்கு நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) திங்களன்று (மார்ச் 2) தெரிவித்துள்ளது.

இவர்கள் சம்பவம் 37, 67, 69 மற்றும் 88 ஆகியவற்றில் உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் ஆவார்கள்.

இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 78ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் தொற்று இல்லை; சிங்கப்பூரில் RI வகுப்புகள் மீண்டும் தொடக்கம்..!

புதிய நபர்கள் உறுதி

அதே வேளையில், இரண்டு புதிய COVID-19 சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய சம்பவங்கள் மூலம் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 108ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 30 நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் 107

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 68 வயதான பெண் சிங்கப்பூரர். இவர் சீனா, Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

இருப்பினும், அவர் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 14 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்துள்ளார். இவருக்கு சம்பவம் 94 உடன் தொடர்புள்ளது.

அவர் தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (என்சிஐடி) தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் 108

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 34 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண். இவர் சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை வைத்துள்ளார்.

மேலும் சீனா, Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

மார்ச் 2 ஆம் தேதி காலையில் அவருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது அவர் Ng Teng Fong பொது மருத்துவமனையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மார்ச் மாதத்தின் முதல் பாதி வானிலை எப்படி இருக்கும்..?