கொரோனா வைரஸ் தொற்று இல்லை; சிங்கப்பூரில் RI வகுப்புகள் மீண்டும் தொடக்கம்..!

கொரோனா வைரஸ் சம்பவம் காரணமாக ராஃபிள்ஸ் இன்ஸ்டிடியூஷனில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வகுப்புகள் இன்று முதல் தொடரும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ராஃபிள்ஸ் இன்ஸ்டிடியூஷனில் (RI) வகுப்புகள் மீண்டும் தொடங்கும், ஏனெனில் பள்ளியில் தொற்றுநோய்கள் எதுவும் இல்லை மற்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர் உடல்நிலை சரியில்லாத போது பள்ளி நடவடிக்கைகளில் பங்குபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 4 பேருக்கு COVID-19 உறுதி – மொத்தம் 106ஆக உயர்வு..!

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவருடன் நெருக்கமான, தொடர்ச்சியான தொடர்பைக் கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் அல்லது கட்டாய விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஃபிள்ஸ் இன்ஸ்டிடியூஷனைச் சேர்ந்த 12 வயது சிங்கப்பூர் மாணவர் ஒருவருக்கு கடந்த பிப்ரவரி 27 அன்று COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பிப்ரவரி 21ஆம் தேதி பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின்னர் மாணவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் அதன் பிறகு பள்ளி சார்பான நடவடிக்கைகளில் அவர் கலந்துகொள்ளவில்லை என்றும், மேலும் அவர் மருத்துவ விடுப்பில் இருந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மார்ச் மாதத்தின் முதல் பாதி வானிலை எப்படி இருக்கும்..?

அதாவது பாதிக்கப்பட்ட மாணவர், இந்த COVID-19 தொற்று கண்டறியப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு தான் பள்ளியில் கடைசியாக இருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே இடைவெளியை கடைப்பிடிப்பது, மாணவர்களின் ஆரோக்கியத்தை தினமும் சரிபார்த்தல் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்களை பள்ளியிலிருந்து ஒதுக்கி வைப்பது ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அடங்கும் என்று MOE தெரிவித்துள்ளது.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள்