சிங்கப்பூரில் மேலும் 4 பேருக்கு COVID-19 உறுதி – மொத்தம் 106ஆக உயர்வு..!

Singapore confirms 4 new COVID-19 cases
Singapore confirms 4 new COVID-19 cases, including 3 linked to cluster at Science Park (Photo: Mothership)

சிங்கப்பூரில் மேலும் நான்கு COVID-19 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) தெரிவித்துள்ளது.

இந்த புதிய நபர்களுடன் சிங்கப்பூரில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 106ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : மலேசியாவின் 8வது புதிய பிரதமர் முஹைதீன் யாசினுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ வாழ்த்து..!

இவற்றில், மூன்று சம்பவங்கள் “விஸ்லெர்ன் டெக்னாலஜிஸ்” (Wizlearn Technologies) உடன் தொடர்புடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, உறுதிப்படுத்தப்பட்ட 11 சம்பவங்கள் (சம்பவம் 93, 95, 97, 98, 99, 100, 101, 102, 103, 104 மற்றும் 105) விஸ்லெர்ன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் உடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது.

குணமடைந்தோர்

மேலும் 2 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதம் மூலம் குணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் மருத்துவமனையில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட 32 நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் லிட்டில் இந்தியா உணவகங்களின் நிலவேம்புக் கசாயம் மற்றும் நண்டு ரசம்..!

சம்பவம் 103

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 37 வயதான பெண் சிங்கப்பூர் குடிமகன். இவர் சீனா, Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

கூடுதலாக, இவர் சம்பவம் 93-இல் உறுதிப்படுத்தப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்.

அவர் தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் 104

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 25 வயதான மியான்மர் நாட்டை சேர்ந்த பெண், இவர் சீனா, Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

இவர் (சம்பவம் 103) வீட்டுப் பணிப்பெண் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது NCID-யில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் 105

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 49 வயதான சிங்கப்பூர் குடிமகன். இவரும் சீனா, Daegu மற்றும் Cheongdo ஆகிய பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொள்ளவில்லை.

இவர் விஸ்லெர்ன் டெக்னாலஜிஸ் உடன் தொடர்புடையவர். தற்போது NCID-யில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் 106

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 54 வயதான ஜப்பானிய நாட்டு ஆடவர், இவர் சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர். இவரும் மேற்கண்ட பகுதிகளுக்கு பயணம் செய்யவில்லை.

இவருக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) காலை கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது NCID-யில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள்